திறைசேரியின் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்
திறைசேரியின் உயர் முகாமைத்துவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது திறைசேரி கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேட தர உத்தியோகத்தரான எச்.சி.டீ.எல்.சில்வா திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
புதிய பதவி நிலை
பிரதிச் செயலாளராகக் தற்போது கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க 2024.11.06 அன்று ஓய்வு பெற்ற பின்னரான வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர அதிகாரியான டீ.ஏ.பீ.அபேசேகர நியமிக்கப்படவுள்ளார்.

எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரி பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் வெற்றிடமான திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அரசு நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேட தர அதிகாரியான ஏ.எஹ்புகல நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டள்ளது.
இத்தோடு, தற்போது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பதில் கடமையிலுள்ள பணிப்பாளர் நாயகமாகக் கடயைாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர அதிகாரியான என்.எஸ்.எம்.பி.ரஞ்சித் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளார்
மேலும், வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் நிணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர ஜே.எம்.எஸ்.டீ.ரத்நாயக்க நியமித்தல் அதிகாரியான ஜே.எம்.எஸ்.டீ.ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam