கோட்டாபயவிற்கு இருக்கும் ஒரேவழி இது மட்டும் தான்! மாற்று வழி இல்லாத ஒரேயொரு தெரிவு
நேர்மையான, புத்திசாலித்தனமான, அனுபவம் வாய்ந்த ஆளுமைகளை உள்ளடக்கிய அமைச்சரவையை நியமிப்பதே தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரே வழியாகும். இதனை தவிர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னோக்கி செல்லமுடியாது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் தலைமைக்கு “இற்றுப்போன கயிறு கொடுக்கும்” நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் எரிபொருள் விலையேற்றத்தினால் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும்.
இந்தநிலையில் சீனாவின் சேதனப் பசளைகளை இலங்கைக்கு எடுத்து வர கட்டளையை பிறப்பித்தவர்களே, கப்பலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri