காணாமல் போனோர் அலுவலக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு, உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலக சட்ட விதிகளின்படி இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையத்தளமான 'www.parliament.lk' இல் உள்ள தகவல் தாளின்படி 'OMP' க்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
நியமனம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசியலமைப்பு சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09 டிசம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது 'constitutionalcouncil@parliament.lk' என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
'OMP'க்கு உறுப்பினர்களின் நியமனம்' என்பது உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
