கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம்: வெளியான மகிழ்ச்சியான தகவல்
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மகிழ்ச்சியான தகவலை கனடா - ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அங்கு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில் முன் அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை
கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக மாகாண அரசாங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
மாகாணத்தில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தொழில் முன் அனுபவம் தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தொழில் முன் அனுபவம் அற்றவர்களையும் நாட்டினுள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் விளம்பரங்கள் மற்றும் விண்ணப்பங்களில் எதிர்வரும் காலங்களில் கனடிய தொழில் முன் அனுபவம் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
