சாரதி தரம் III பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்
கிழக்கு மாகாணப் பொதுச் சேவையின் இணைந்த சாரதிகள் சேவையின் சாரதி தரம் III பதவிக்கு, திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்புகள் நடைபெறவுள்ளன.
எழுத்துமூலப் பரீட்சை
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் : கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பிரஜையாக இருத்தல் வேண்டும். (இதர கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் உத்தியோகபூர்வ அறிவித்தலில் உள்ளவாறு அமைதல் வேண்டும்.)

விண்ணப்பிக்கும் முறை : இம்முறை விண்ணப்பங்கள் ஒன்லைன் (Online) ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவும்: www.ep.gov.lk அதில் 'Exams' பகுதிக்குச் சென்று 'Online Application' ஊடாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப ஆரம்பத் திகதி: 2026.05.26 (நாளை மு.ப. 9.00 மணி முதல்) விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.22 (பி.ப. 10.00 மணி வரை) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இறுதித் திகதியின் பின்னர், கிழக்கு மாகாணத்தின் நான்கு முக்கிய நகரங்களில் எழுத்துமூலப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் இப்பரீட்சை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு