எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சீராய்வு மனுக்களை நிராகரித்த நீதிமன்றம்
இலங்கையின் கடல்சார் சூழலுக்கு சேதம் விளைவித்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தீயினால் நாசமடைந்த கொள்கலன் கப்பலான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் உட்பட 8 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான தமது ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தே, குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் மறுசீரமைப்பு விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தனர்.
கரையோர பகுதிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் பி. அபயகோன் மற்றும் பி. குமாரரட்ணம் ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமலேயே மறுசீரமைப்பு விண்ணப்பத்தை நிராகரித்தது.
இலங்கையின் கடற்பரப்பிற்குள் நாட்டின் கரையோரப் பகுதிகளை அழித்தமைக்காக கப்பலின் கெப்டன்; Tyutkalo Vitalyon, Sea Consortium Lanka (Pvt) Ltd. அதன் பணிப்பாளர்கள் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.