இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அரசாங்கம்
இலங்கை பிரஜைகளிடம் இருந்து தகவல் அறியும் உரிமை (RTI) ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின் கீழ், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு சபை கோரியுள்ளது.
நாடாளுமன்ற இணையத்தளம்
அதன்படி, விண்ணப்பங்கள் www.parliament.lk என்ற நாடாளுமன்ற வலைத்தளத்தில் 'தகவல் உரிமை ஆணையத்தில் உறுப்பினரை நியமித்தல்' என்ற பகுதியில் பெற்றுக் கொள்ளலாம்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 01, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப முடியும்.
மேலும் 'தகவல் உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம்' என்பது உறையின் மேல் இடது மூலையிலோ அல்லது மின்னஞ்சலின் விடயமாகவோ குறிப்பிடப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை https://www.parliament.lk/en/secretariat/advertisements/view/329 என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
