அப்பிள் கைப்பேசி வைத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! சாதனை படைத்த இணைய ஊடுருவிகள்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் கைப்பேசி 15 வினாடியில் இணைய ஊடுருவிகளால் ஊடுருவல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் சீன நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டியொன்று செங்டு நகரில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஐ.ஓ.எஸ் 15.0.2 மென்பொருள் மூலமாக செயற்படக்கூடிய சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ வகை கைப்பேசியினை வெறும் 15 வினாடிகளுக்குள் ஊடுருவல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த குழு ஐபோன் 13 ப்ரோ வகை கைப்பேசியை நேரலையில் மேடையில் வைத்து 15 வினாடிகளுக்குள் ஊடுருவி காட்டியுள்ளது. ஐபோனில் உள்ள சபாரி வெப் பிரவுசர் ரிமோட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இவ்வாறு ஊடுருவி கைப்பேசிக்குள் புகுந்துள்ளனர்.
இவர்கள்,ஐ.ஓ.எஸ் 15 மென்பொருள் மூலமாக செயல்படும் ஐபோன் 13 ப்ரோ கைப்பேசியினை, தொலை தூரத்திலிருந்து ஹேக் செய்து முதல் பரிசான 3 லட்சம் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
