இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள புதிய முயற்சி
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான, ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, உலகளாவிய மின்னணு உற்பத்திகளுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பமுடியாத அற்புதமான சந்தை
இதன்படி ஆப்பளின் ஒப்பந்த தயாரிப்பாளரான தைவானின் விஸ்ட்ரான் கோர்ப்பரேஷன், அதன் இந்திய பிரிவை டாடா குழுமத்திற்கு 125 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியா ஒரு 'நம்பமுடியாத அற்புதமான சந்தை' என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri