தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக கைது செய்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு,பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்தரணியின் அடிப்படை ஆட்சேபனை
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று (27.03.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
