சிறிரங்காவின் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தனக்கும் குற்றம்சாட்டப்பட்ட ஐவருக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து மற்றுமொரு நீதிபதிக்கு மாற்றுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சிறி ரங்கா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன் மனுவை விசாரிப்பதற்காக மதிப்பிடப்பட்ட சட்டச்செலவை சிறிரங்காவிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றின் இரண்டு நீதியரசர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக, நீதிபதி எம்.எம்.எம் மிஹால் பக்கச்சார்பாக நடந்துக்கொண்டார் என்று குற்றம் சுமத்த, மனுதாரரால் போதுமான தகவல்களைக் காட்ட முடியவில்லை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மனுதாரரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவு
முன்னதாக இந்த வழக்கு முதலில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி இளஞ்செழியன் முன் வழக்கை விசாரிக்க அரசு ஆட்சேபனை தெரிவித்ததால், குற்றம் சாட்டப்பட்ட மனுதாரர் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன்படி, நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கை பிரதம நீதியரசருக்கு அனுப்பியிருந்தார், இதன் பின்னர் பிரதம நீதியரசர், வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாலை நியமித்தார். இந்தநிலையில் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட-மனுதாரருக்கு ஆதரவாக சாட்சியமளிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஒரு அரசுத் தரப்பு சாட்சி ஒருவர் திறந்த நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதி மிஹால் உத்தரவிட்டிருந்தார். காவல்துறை விசாரணையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மனுதாரரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தமது வழக்கை விசாரணை செய்ய மற்றுமொரு நீதிபதியை நியமிக்குமாறு மனுதாரர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார் எனினும் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் பாரபட்சமற்றவர் மற்றும் வழக்கு தொடர்பான ஒரு சார்புடையவர் அல்லர் என்றும் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,குற்றம் சாட்டப்பட்ட-மனுதாரர் செய்த விண்ணப்பத்தில் எந்த தகுதியும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
