நிதியமைச்சர் பஸில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது. கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு
ஈடுபட்டுள்ளது.
அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை,
அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள்
நன்கறிவார்கள் என குறிப்பிட்டார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri