மகிந்தவின் புதிய அமைச்சுக்கான செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரான சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி (ஓய்வுநிலை) அனுஷ பெல்பிட்ட, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச குறித்த அமைச்சின் அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அத்துடன், அவர் வகித்த நிதியமைச்சு பதவி பசில் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பதவி வகித் அனுஷ பெல்பிட்ட, அண்மையில் ஓய்வுபெற அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்பின்னர் கடந்த ஜூன் 21ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
மூத்த நிர்வாக அதிகாரியான அனுஷ பெல்பிட்ட, இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலாகவும், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
