மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அநுரவின் இந்தியா விஜயம் : இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு
மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அநுரவின் இந்தியா விஜயம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதலீடு
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முஸ்லிம்களையும் சிறுபான்மை மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அநுரவும் அவரது சகாக்களும் இந்தியா சென்றனர். இந்தியாவின் அழைப்பில்தான் அநுர இந்தியாவுக்கு சென்றார்.
மோடி அரசின் நிகழ்ச்சி நிரலில் தான் அந்த விஜயம் அமைந்திருந்தது. அங்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தது மோடி அரசாங்கம்தான். புல்டோஷரை கொண்டு முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் குஜராத் மாநில முதலமைச்சரை சந்தித்தார் அநுர.
அதானி குழுமத்தை சந்தித்தார். குஜராத் முதலமைச்சருடன் என்ன ஒப்பந்தம் செய்தார். அதானி குழுமத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார், மோடி அரசாங்கத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார் என்பது இதுவரைக் காலமும் அவர் வெளிப்படுத்தப்பட வில்லை.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக எப்பொழுதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் அநுர இந்திய விஜயத்தின் பின் இந்தியாவின் முதலீடுகளுக்கு எதிராக இதுவரை எந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இது தவிர இவர்கள் அடுத்தடுத்து மேற்கு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவர்களின் கொள்கைகத்தான் என்ன?இன்று இஸ்ரேலை எதிர்ககும் அநுரவும் சஹாக்களும் நாளை இஸ்ரேலுடனும் தேனிலவு கொண்டாடமாட்டார்கள் என எப்படி நம்புவது? எனவே நாங்கள் இந்த அநுர விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
அநுர யார்? அவர்களின் கொள்கை என்ன? எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதையெல்லாம் அவர்களின் திசைக்காட்டியே எமக்கு காட்டிவிட்டது.
அவர்களின் அந்த மோசமான திசை நோக்கி நீங்கள் சென்று நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
