அநுரவின் வெற்றி வன்முறையாக உருவெடுக்கும்: மொட்டுக்கட்சியின் கருத்தை புறக்கணிக்கும் என்.பி.பி
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் கடுமையாக ஏற்படலாம் என மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் தவறாக கருத்துரைத்து வருவதாக தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பண்டாரகமவில் நேற்று (22) நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர் தமக்கு எவ்வாறான சூழ்நிலை ஏற்படும் என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அநுரவின் வெற்றி
அநுரவின் வெற்றி தொடர்பில் அக்கட்சியின் மதுர விதானகே எம்.பி விடயத்தை முன்வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் கடுமையாக ஏற்படலாம் என்ற முன்னறிவிப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தக் கருத்தையெல்லாம் தான் நிராகரிப்பதாகவும் , செப்டம்பர் 22, ஒரு சாதனை வெற்றி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.