அனுராதபுரத்தில் விபத்து! ஒருவர் பலி: கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம், எப்பாவலை - பொத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் கர்ப்பிணி மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என நால்வர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம்
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றி வந்த மேற்படி பொலிஸ் சார்ஜன்ட், தனது குடும்பத்தினர் மற்றும் சக பொலிஸ் கான்ஸ்டபிளுடன் நேற்று சிறிய லொறியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அதிவேகமாக சென்ற சிறிய லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்தின் பக்கவாட்டுக் கண்ணாடியில் மோதியதுடன், அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்துடன் மோதித்தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முதலில் எப்பாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
QR குறியீட்டு சிக்கல்களுக்கு உடன் அழைக்கவும்! உணவு விநியோக சேவையில் ஈடுபடுவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 17 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri