சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மத குருமார்கள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் 56 மதகுருமார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கொலை, பாலியல் வன்கொடுமை, பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள் ,நிதி மோசடி மற்றும் புதையல் தோண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மதகுருமார்கள் இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தண்டனை அனுபவிக்கும் மதகுருமாரின் எண்ணிக்கை 34 எனவும் அதிக அளவிலான மத குருமார்கள் பௌத்த துறவிகள் எனவும், மேலும் இந்து மதகுருமார்கள் மூவரும், இஸ்லாம் மதகுருமார் இருவரும் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றனர்.
தண்டனை கால அறிவிப்பு
மேலும் சந்தேகநபர்களாக 21 மதகுருமார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மத குருமார்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பௌத்தப்பிக்குகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை 19 பேர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 19 பௌத்த மதகுருமார்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் இரண்டு பௌத்த மத குருமார்கள் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
