அனுரகுமார அழகாகவும் பெருமை கொண்டவராகவும் மாறியுள்ளார் - மகிந்தானந்த
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தற்போது சற்று அழகாக மாறியுள்ளதுடன் பெருமை கொண்டவாராகவும் மாறியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார தற்போது எம்மை பார்த்து சிரிப்பதில்லை

அனுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் எம்மை கண்டால் சிரித்து பேசுவார்.தற்போது சற்று பெருமை கொண்டவராக மாறியுள்ளார். தற்போது எம்மை பார்த்து புன்னகைப்பதில்லை.
அன்று ஐயா எனக்கூறி ரணிலுக்கு பின்னால் சென்றனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை தற்போது ரணில் என கூறி பேசும் நபர்கள், அன்று ஐயா எனக்கூறிக்கொண்டு பின்னால் சென்றது எமக்கு நினைவில் இருக்கின்றது.
தேசிய உடை அணிந்த எங்களில் சிலர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்று கோட் சூட் அணித்தனர் எனவும் அளுத்கமகே மேலும் கூறியுள்ளார்.
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri