ஈழத்தமிழர்களுக்கு எதிராக பதவியை துறந்த அநுர குமார
இடைக்கால நிர்வாக சபை கட்டமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமைச்சரவை பதவியை துறந்தவர்களில் ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் கனடா விஜயம் தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் வாழும் இலங்கையர்களிடம் உரையாற்றும் நோக்கில் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கனடாவிற்கு வருகை தருமாறு அநுர குமார திஸாநாயக்கவிற்கு யாரும் அழைப்பு விடுக்காத நிலையில், கனடாவிற்கு வருகை தந்த பலம் பொருந்திய சிங்கள தலைவர் என்ற பெயரை அநுர பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        