அனுராதபுரம் திருகோணமலை வீதியில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம் (Anuradhapura), திருகோணமலை வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் சொகுசு காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தானது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தேவை
இந்நிலையில், காயமடைந்தவர்கள் ஹொரோவ்பதான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலை பகுதிக்கு தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam