அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்! சந்தேகநபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கடந்த ஆண்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் மீது சட்டமா அதிபர் நேரடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் சுருக்க விசாரணை அல்லாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சட்டமா அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் மீது நேரடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் தகாத துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவமனை குடியிருப்புக்குள் நுழைந்த குற்றம்சாட்டப்பட்டவர், அவரை கத்தி முனையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் பிணையில் வெளியே உள்ளதுடன், இந்த வழக்கு விரைவில் அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கமைய, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்