நிமல் லான்சாவின் புதிய கூட்டணி: அனுர பிரியதர்ஷனவிற்கு வழங்கப்படவுள்ள பொறுப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள, புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அதிகாரம் உட்பட சகல பொறுப்புக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பாவிடம் ஒப்படைக்கும் யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் லன்சா மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற குழு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய போது யாப்பா புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சொந்த பிக்கு அமைப்பு
இந்த நிலையில் கொழும்பு, புத்தளம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சில உள்ளூர் அரசியல்வாதிகள் இந்தக் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கூட்டணி விரைவில் தனது சொந்த பிக்கு அமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கூட்டணியாகவே உருவாக்கப்படுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
