ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள வர்த்தமானி: இரத்து செய்யப்பட்ட உரிமை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் உரிமை அவண்ட் கார்ட் நிறுவனத்திடம் இருந்து இரத்துச் செய்யப்பட்டு, இன்று தொடக்கம் மீண்டும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சேவை நிறுவனவே அவண்ட் கார்ட ஆகும்.
இது உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றது.
கோட்டாபய எடுத்த நடவடிக்கை
முன்னதாக சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் செயற்பாடு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போதும், கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அதனை அவண்ட் கார்ட் நிறுவனத்துக்குக் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



