ரணிலும் பிமலும் ஒரே நிகழ்வில்
முன்னான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்பில் ஆளும் தரப்பு பெரிதும் விமர்சித்து வருகிறது.
எனினும், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ரணில் விக்ரமசிங்கவும், ஆளும் தரப்பின் அமைச்சரான பிமல் ரத்நாயக்கவும் கலந்துக்கொண்டமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இலங்கையின் பாடலாசிரியர், எழுத்தாளர் சமன் அத்தாவுடஹெட்டி எழுதிய "சமன் சேஸ் 2", அவரது மகள் தாரகா அத்தாவுடஹெட்டி எழுதிய "சாக்ஹோலிக் ஹீனா" மற்றும் அவரது மகன் தருசர பெரேரா (தாரகா அத்தாவுடஹெட்டியின் மகன்) எழுதிய "பிளாக் டிராகன் - கலு மகரா" ஆகிய படைப்புகளின் முத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (12) கொழும்பில் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன கேட்போர் கூடாரத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்த நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோறும் கலந்துக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri