தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் முடிவுக்கு வரும் அநுரவின் ஆட்சி! உறுதியாகக் கூறும் முக்கியப் பிரமுகர்..
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம், அவர்களிடம் 159 பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சில காலத்திற்குள் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க, ஒன்று சேர்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.
அரசாங்கத்தை தோற்கடிப்போம்..
எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால், அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இலக்கை அடைய முடியும்.
இந்த தேசத்திற்கு ஏதாவது சேவையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் அரசியலை தேர்ந்தெடுத்தோம்.

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.
நான் ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். 159 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு பயணிக்காது. விரைவில் முடிவுக்கு வரும். இதனை நினைவிற் கொள்ளுங்கள்.
தமிழ் - சிங்கள் புத்தாண்டிற்கு முன்னதாகவே இந்த ஆட்சி முறியடிக்கப்படும். நாடாளுமன்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15