பறிபோகுமா அநுரவின் ஆட்சி! திரைமறைவில் பெரும் சதி
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எம்மிடம் பெரிய திட்டம் உள்ளது என மகிந்த ராஜபக்ச கூறிய விடயத்தை தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளாமல் விட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, விரைவில் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் மகிந்த குறிப்பிட்டிருந்த விடயமானது பலர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க விசாரணைகள் நடைபெறுகின்றது, ஆணைக்குழுக்கள் தெரிவு செய்யப்படுகின்றது எனக் கூறிக்கொண்டு இருக்கின்றார்.இதேபோன்று தான் ரணிலும், மைத்திரிபால சிறிசேனவும் கூறிவிட்டு ஆட்சியில் இருந்து விலகிச் சென்றனர்.
இந்த நிலையிலே, மகிந்த ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று தெரிவித்ததில் ஆயிரம் அர்த்தம் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், மகிந்த ராஜபக்சவிற்கு என்ன தெரியும் என்று என்.பி.பியோ அல்லது ஜே.வி.பியோ சொல்லுமாக இருந்தால் பெரும் ஆபத்தில் தான் முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்பு நிகழ்ச்சி....
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam