ஊழலுக்கு எதிராக முழு அமைப்பையும் மாற்றுவேன்: ஜனாதிபதி இடித்துரைப்பு
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையின்படி, தனது நிர்வாகத்தின் முழு அமைப்பையும் மாற்றி இலங்கையை ஆரோக்கியமான நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
ஊழல் ஆணைக்குழு
இதன்படி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியினால் சில நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 2021ஆம் ஆண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 69 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 40 வழக்குகள் மீள பெறப்பட்டுள்ளதாகவும்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022ஆம் ஆண்டு 89 வழக்குகளை தாக்கல் செய்து 45 வழக்குகளை மீளப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, இந்த வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாக இருக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
