அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்கு செல்லப்போகும் பலர்..
தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளுக்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.
எனினும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க குறித்த விவகாரத்தை ஏன் இவ்வளவு அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam