அனுர தரப்பினரின் அழைப்புக்கு கஞ்சன விஜேசேகர மறுப்பு
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர் வசந்த சமரசிங்கவுடன் பகிரங்க விவாதத்தில் பங்கேற்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனினும் தம்முடன் விவாதத்துக்கு வருமாறு அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
விவாதத்திற்கு விடுத்த அழைப்பு
இந்த நிலையில் அநுரகுமார திஸாநாயக்க தனது பிரதிநிதியாக வசந்த சமரசிங்கவை அனுப்பினால், தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவரை அனுப்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர விவாதம் ஒன்றுக்கு விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்த அனுரகுமார திசாநாயக்க, மின்சார சபை, எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவுகள் மற்றும் சூரியசக்தி ஒப்பந்தங்கள் தொடர்பில் வசந்த சமரசிங்கவை விவாதத்திற்கு அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
