ஜனாதிபதி அநுரவுக்கு மாலத்தீவில் அமோக வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலத்தீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து இன்று முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.
அங்கு மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு வரவேற்றுள்ளார்.
ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலத்தீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
Just landed in the Maldives! Ready to engage in meaningful discussions with President @MMuizzu and other leaders to strengthen our collaboration. We will also sign several MoUs that will enhance cooperation between Sri Lanka and the Maldives! pic.twitter.com/zwGv9tfSXi
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) July 28, 2025
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
