தேனீர் கடையைக் கூட செய்ய தகுதியற்றவர் என கூறப்பட்ட அநுர நாட்டை மீட்டுள்ளார்
தேனீர் கடையொன்றைக் கூட நடாத்தத் தகுதியற்றவர் என விமர்சனம் செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வங்குரோத்து அடைந்த இந்த நாட்டை மீட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை எதிர்க்கட்சிகள் போன்று அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறைச்சாலை ஒன்றை பராமரிக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு நாட்டு மக்களை பராமரிக்கப் போகின்றது என்ற எதிர்க்கட்சிக் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்வி அர்த்தமற்றது என அவர் சுட்டி்க்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தின் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் குறுகிய அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையில் குளிர்காய முயற்சிப்பதாக நிலாந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan