சட்டத்திற்கு எதிரான செயற்பாடு! ஜனாதிபதி பகிரங்க கேள்வி
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நிறுவனத்தின் தலைவரே சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாட்டின் குடிமக்களை சட்டத்தை கடைப்பிடிக்க எப்படி அழைப்பது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அதி வணக்கத்திற்குரிய கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி நாயக்க தேரருக்கு அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க பதவி வழங்கப்பட்ட தேசிய விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
புதிய மகாநாயக்க தேரருக்கு அதற்கான ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
புத்தசாசன அமைச்சு
புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, மகாநாயக்க தேரருக்கு விஜினிபத்தை வழங்கியுள்ளார்.

1948 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி மாத்தறை கம்புறுபிட்டியவில் பிறந்த வணக்கத்திற்குரிய கரகோட உயன்கொட மைத்ரிமூர்த்தி நாயக்க தேரர், 1962 ஆம் ஆண்டு அக்மகா பண்டித பலங்கொட ஆனந்த மைத்ரி நாயக்க தேரரிடமிருந்து துறவறம் பெற்று, புனித துறவற வாழ்க்கையில் நுழைந்தார்.
அவர் தனது அறுபது ஆண்டுகளுக்கும் மேலான துறவற வாழ்க்கையில் ஆற்றிய சாசன, மத, சமூக மற்றும் கல்வி சேவைகளைப் பாராட்டி, அமரபுர மகா நிகாயவால் புதிய மகாநாயக்க பதவி வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri