இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் (Gampaha) நேற்று (11.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சி
எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
