இறுதிப்போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை சந்தித்த அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.
படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டுள்ளார்.
முப்பது வருட யுத்தம் காரணமாக
முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

ஊனமுற்ற படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
படையினருக்கு மேலும் மருத்துவ சேவை வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri