நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஜனாதிபதி சந்திப்பு
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விசாரணை நடத்துவது மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
புனரமைப்புப் பணிகளையும் முடிக்க
டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை சரிசெய்ய எடுக்கும் நேரம் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

வழக்கமான பழுதுபார்ப்புகளின் மூலம் திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்ட ஜனாதிபதி, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், மதகுகள் மற்றும் பக்கவாட்டுச் சுவர்களை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக வழங்குமாறும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்புப் பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
