கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்று (20.03.2024) மாலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சகோதரத்துவ சந்திப்பு
அதில் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறவுள்ளது.
அதேநேரம், இரண்டாவது சந்திப்பானது, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக அவர் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri
