தேர்தலுக்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அனுர
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (12) காலை கையொப்பமிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அனுரகுமார திஸாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை கடந்த 6ஆம் திகதி செலுத்தியிருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் கட்டுப்பணத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் செலுத்தியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam