நீதித்துறையையே கைவிட்ட அரசாங்கம் எப்படி தீர்வைத் தரும்..! அநுர கேள்வி
நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம், இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வை வழங்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கத்தை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
ரணில் கூறிய விடயம்
மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 'இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க கருத்துரைக்கும்போதே குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சர்வதேச சமூகத்தை மாத்திரமல்ல இங்குள்ள அரசியல்வாதிகளையும், மக்களையும் ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கனவு காண்கின்றது.
விழிப்புடன் இருக்கும் மக்கள்
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அரசாங்கத்தின் கனவு தவிடுபொடியாகி விடும். இங்குள்ள சில அரசியல்வாதிகள் கோமா நிலையில் இருந்தாலும் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.

வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம். அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam