பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அறிவித்தார் அநுர
பிரதமர் பதவியை ஏற்க நான் தயாராக இருக்கின்றேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணில் பதவி விலக வேண்டும்
சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை.
எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும் என்றார். இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அநுரவினால் முடியும் என்றால் பதவி விலகத் தயார்
இதேவேளை, தனது பதவியை இராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் பதவியை வழங்குங்கள் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு முடியுமென்றால் அந்த திட்டத்தை வரவேற்கின்றோம். அநுர குமார திஸாநாயக்கவின் திட்டம் வெற்றியளிக்கும் என்றால் உடனடியாக பதவியை விலக தயாராக உள்ளேன்.
பாரிய வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை 6 மாதங்களுக்கு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அநுர குமாரவிடம் திட்டமிருந்தால் அதற்கு ஒரு நோபல் பரிசு வழங்க முடியும்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
