முக்கிய பிரச்சினைகளை மூடி மறைக்கின்றார் அநுர: சாணக்கியன் குற்றச்சாட்டு
எமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தற்போது கவனம் செலுத்துகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, பெளத்த மதவாதத்தின் ஊடாக ஜனாதிபதி அரசியல் செய்கின்றார் எனவும் சாணக்கியன் கூறியுள்ளார்.
ஏறாவூரில் நேற்று (18) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முக்கிய பிரச்சினை
அவர் மேலும் உரையாற்றுகையில், "கடந்த ஆட்சியில் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றும் புத்த பிக்குகளிடம் சரணடையும்போது, குண்டர்கள் தங்கள் பிழைகளை மறைக்க ஓடி ஒளிக்கும் இடம் தான் இவ்வாறான மதஸ்தானங்கள் என்று தற்போதைய ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஆனால், அவர் தற்போது புத்தரின் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் முன்னிலை வகிக்கின்றார்.
ஆனால், எமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுரகுமார தற்போது கவனம் செலுத்துகின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
