இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அச்சத்தில் அநுர
இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பெறுப்பு கூற வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் இன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அரசாங்கப் படைகள் தீவிரமாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான போரைத் தொடர்ந்ததால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிட்டமை குறித்து வெளியான ஆய்வு அறிக்கைகள் தொடர்பில் சர்வதேச சபைகளில் இன்றுவரை கேள்விகள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் வருகைத்தந்த அரசாங்கங்கள் இவற்றுக்கான தீர்வையும் பதிலையும் வெளிப்படுத்தியதா என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் போர்குற்ற நிலைப்பாடுகள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் ஆராயப்பட்டது.
இதன்போது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு, அநுர தரப்பானது போர்குற்றம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுக்காக இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அச்சத்தில் இருப்பதாக கூறினார்.
மேலும், இலங்கையில் முன்பு போன்ற இரத்தம் சிந்தும் மோதல் நிலையை அநுர தரப்பு மறுக்கும் நிலையை கொண்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |