வடக்கின் அபிவிருத்தி குறித்து அநுர அரசு சாதகமான நிலைப்பாடு : ஆளுநர் சுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை அடிக்கல் நாட்டு விழாவி்ன் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை
சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் பிறருக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர். அவ்வாறான நிலைமையில் இவ்வாறானதொரு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும், என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



