அநுர அரசின் வீழ்ச்சி..!! மனம் மாறியுள்ள அரச ஊழியர்கள்..
அரச ஊழியர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவு நிலையில் இருந்து அவர்கள் மாறியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம்(Akilaviraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வீழ்ச்சி..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் இரண்டு செய்திகளை வழங்கியுள்ளனர். ஒரு செய்தி அரசாங்கத்திற்கும் மற்றொன்று எதிர்க்கட்சிக்கும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட செய்தி என்னவென்றால், மக்கள் இனி அவர்கள் சொன்ன பொய்களால் ஏமாற போவதில்லை என்பதாகும். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்திருக்கும் செய்தி என்னவென்றால், எதிர்க்கட்சிகள் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால் மக்கள் அதைச் சுற்றி அணிதிரள்வார்கள் என்ற செய்தியாகும்.
இருந்த போதும் இந்தத் தேர்தல் முடிவால், அரசாங்கம் எதிர்காலத்தில் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசாங்கத்தின் வீழ்ச்சி இங்குதான் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் அரச அதிகாரிகள் மாறியுள்ளனர். அதனால் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை முறையாக செயல்படுத்த முடியாமல் போவது போன்ற ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கத்துக்கு நேரிடும் என குறிப்பிட்டார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
