அநுர ஆட்சியின் அதிரடி நடவடிக்கை - இலங்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
இலங்கையில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சிகளால் இன்று சிகரெட் பாவனை குறைந்திருப்பதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு குழு உறுப்பினரும், ரஜட்ட பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடாதிபதியுமான டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முழு நாடும் ஒன்றாக தேசிய திட்டத்தின் பிரதான அலுவலகத்திலும், ஊடக நிலையத்திலும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.
போதைப்பொருள் பாவனை
கடந்த கால அரசாங்கங்கள் போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் சமகால அரசாங்கம் போதைப்பொருள் கலாசாரத்தை வேறொடு களைவதற்கு நடவடிக்கை எடுத்தது.

போதைப்பொருள் பழக்கத்தின் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதை விடவும், போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலம் இளம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும் என டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அமெரிக்காவினால் ஈரானுக்கு தொடரும் அச்சுறுத்தல்! இலங்கையிடம் பாதுகாப்பு கோரி உள்நுழைந்துள்ள 20 கப்பல்கள்
இலங்கையின் முக்கிய பொருளாதார வலயத்திற்கருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - வெளியுறவு அமைச்சு விளக்கம்