2029இன் ஜனாதிபதியைக் கண்டு அநுர அரசாங்கம் அச்சம்! நாமலை குறிவைக்க காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு
2029ஆம் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதை அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதனால் தான் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் ராஜபக்சர்களை தொடர்புபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாமலுக்கு தொடர்பில்லை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கத்திற்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தார்கள். அவர்களுள் போதைப்பொருள் வர்த்தகர்கள், தவறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் என பலர் இருக்க முடியும். அவர்களுடைய தனிப்பட்ட செயற்பாடுகளுக்கும் கட்சிக்கும் தொடர்பு கிடையாது.
ஐஸ் போதைப்பொருள் வர்த்தகர்களோடு நாமல் ராஜபக்சவை தொடர்புபடுத்தி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கருத்து தெரிவிக்கின்றார். குறித்த சந்தேகநபர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது நாமல் ராஜபக்சவோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அவ்வளவே.
2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதி ஆவார் என்பதை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது. இதனால் தான் ராஜபக்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
