புத்தாண்டுக்குப்பின் அமைச்சரவை மாற்றம்! ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் தகவல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைக்கு கூடுதலான அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் அமைச்சர்களின் பொறுப்புகள் புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அமைச்சுப் பதவி
அதன் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு பிரதி அமைச்சராக இருக்கின்ற இளம் அரசியல்வாதியொருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை தற்போதைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, வழிநடத்தி வருவதாக நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.