பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல்

SLPP Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka National People's Power - NPP Nalinda Jayatissa
By Rakesh Jan 11, 2025 11:41 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது பதற்றமடைய ஆரம்பித்திருப்பதாகவும் அவர்கள்  ஊடகங்களை கையாளும் விதத்தில் இது தெளிவாகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் குறிப்பிடுகையில்,

அண்மைக்காலமாக அரசின் பிரதிநிதிகள் சிலர் ஊடகங்களுடன் முரண்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்கள் தொடர்பில் பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். சில சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிடுகையில், பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசு பதற்றம்

நாடாளுமன்றத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர்களைக்கூறி உரையாற்றுகின்றார். நான் கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சில் பணியாற்றியவன் என்ற ரீதியில், தற்போதைய அரசு ஊடகத்துறையைக் கையாளும் விதம் மிகவும் ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல் | Anura Government Is Panicking Charitha Herath

அரசு தற்போது பதற்றமடைந்து துலங்கலை வெளிக்காட்டும் நிலையை அடைந்திருக்கின்றது. வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக்கூடும்.

இருப்பினும் நாம் அதனைப் பொறுமையுடன் கையாண்டு, அதற்கு அறிவார்ந்த ரீதியில் பதிலளிக்க வேண்டும். மாறாக ஊடகங்கள் தமக்கு ஏற்றவாறு அல்லது தமக்குச் சார்பாக செயற்படவில்லை என அரசு பதற்றம் அடையக்கூடாது.

வீழ்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரம்! ​ரோஹிணி

வீழ்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரம்! ​ரோஹிணி

பொருளாதாரக் கொள்கை

எனவே, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசின் பிரதிநிதிகள் ஊடகங்களைப் பெயர் குறிப்பிட்டுத் தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல் | Anura Government Is Panicking Charitha Herath

முன்னாள் ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டங்களைத் தவறு என்று தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்தனர்.

தாம் புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதாகக் கூறியே அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினார்கள். ஆனால், ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளையே தற்போதைய அரசினரும் மாற்றமின்றிப் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US