தமிழர் பக்கம் திரும்பும் அநுர அரசாங்கம்.. அச்சத்தில் தென்னிலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுவாரோ என்ற அச்சம் தென்னிலங்கையில் பரப்பப்படுகின்றது என பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுவாரோ என்ற அச்சம் தென்னிலங்கையில் பரப்பப்படுகின்றது.
இதன் அடிப்படையிலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னணி கூட தெரியாமல் தேரர் ஒருவர் கருத்து வெளியிட்டிருப்பது வாயிலாக மிகவும் மோசமான ஒரு இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கியிருக்கின்றார்.
ஆகவே, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பௌத்த தேரர்கள் அஸ்கிரிய மல்வத்த பீடங்கள் இவ்வாறான தேரர்களின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்க வேண்டும்” என கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
