சாணக்கியனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தப்பியோடிய அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பற்றி கேட்டபோது பதிலளிக்காமல் தப்பியோடி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகால அரசாங்கத்திலே பல விடயங்களை ஒன்றாக ஆராய்வது கடினம். எனவே குறித்த சில விடயங்களை மட்டும் கூறுங்கள் பதிலளிப்போம் என கூறப்பட்டது.
ஆனால், தற்போதுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடுதான் என்ன. இந்த வருடத்திலே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகள் கூட கடந்த காலத்தைப் போல்தான் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
