இந்திய பிரதமரின் இலங்கை வருகையை உறுதிப்படுத்திய ஜனாதிபதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2025 ஏப்ரல் 05 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.
2025 வரவுசெலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாளான இன்று(21) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
இந்தியப் பிரதமரின் வருகை
இந்தியப் பிரதமரின் வருகையுடன் சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாகவே வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு மாதங்களுக்குள் சியம்பலாண்டுவவில் ஒரு புதிய சூரிய மின்சார நிலையத்தையும் மன்னாரில் 50 மெகாவாட் புதிய காற்றாலை மின் நிலையத்தையும் நிர்மாணிக்கமுடியும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 16 மணி நேரம் முன்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
